spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்படும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

we-r-hiring

அரசுப் பள்ளிக்கு நிலத்தை கொடையாக அளித்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருது தரப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சனநாயகத்தை வென்றெடுக்க தை திருநாளில் உறுதியேற்போம் – திருமாவளவன் பொங்கல் வாழ்த்து

தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரையா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – டிடிவி தினகரன் கண்டனம்

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும், கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ