
தங்கள் மீது பதியப்பட்ட குற்ற வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இருந்து விடுவிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றித் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனம் தொடர்பாக, பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேல், இணைப்பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.
2024-ல் தல பொங்கல் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
வழக்கில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார். இதில் பதிவாளர் தங்கவேல் மற்றும் சதீஸ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், இந்த மூவரும் தங்கள் மீதுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். துணைவேந்தர் தொடர்ந்துள்ள வழக்கு வரும் ஜனவரி 18- ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.