Homeசெய்திகள்சினிமாஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியின் புதிய படம்.... முடிந்தது பூஜை.... படப்பிடிப்பு எப்போது?

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியின் புதிய படம்…. முடிந்தது பூஜை…. படப்பிடிப்பு எப்போது?

-

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியின் புதிய படம்.... முடிந்தது பூஜை.... படப்பிடிப்பு எப்போது?ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய படம் மார்க் ஆண்டனி. எஸ் ஜே சூர்யா, விஷால் ஆகியோரை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

அதேசமயம் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிப்பில் இயக்க உள்ள புதிய படத்தின் பூஜை கடந்த பொங்கல் தினத்தன்று சென்னையில் சிறப்பாக நடந்து முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் படப்பிடிப்புகள் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் கூட்டணியின் புதிய படம்.... முடிந்தது பூஜை.... படப்பிடிப்பு எப்போது?

அஜித் விடாமுயற்சி படத்திற்காக பிப்ரவரி மாதம் வரை கால் சீட் கொடுத்துள்ளாராம். எனவே அஜித், விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள தனது 63 வது  படத்தில் இணைவார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ