- Advertisement -
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்து மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், ரேமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், டாக்டர், டான் ஆகிய படங்களில் நடித்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் அயலான். ரவிக்குமார் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைஅமைத்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார்.




