

மதுரை மாவட்டம், கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும காளைகளின் உரிமையாளர்கள் இன்று (ஜன.19) முதல் தங்களது பெயர்களைப் பதிவுச் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மீண்டும் வெற்றிமாறனுடன் இணைந்த சூரி ….ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in மூலம் தங்களது பெயர்களை இன்று (ஜன.19) மதியம் 12.00 மணி முதல் ஜனவரி 20- ஆம் தேதி மதியம் 12.00 மணி வரை பதிவுச் செய்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவுச் செய்யப்படும் மாடுபிடி வீரர்கள், உடற்தகுதி சான்றுடனும், காளைகளின் உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றிதழ்களுடனும் பதிவுச் செய்ய வேண்டும் என்றும் காளைகளுடன் உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கம் உள்ள உதவியாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அயலான்’ படத்தின் VFX பணிகளை பாராட்டிய நடிகர் சூர்யா!
கீழக்கரை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 24- ஆம் தேதி திறந்து வைக்கிறார். அன்றைய தினத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.


