Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

ஈரோடு இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்த தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம் ஐயா ஜி.கே.வாசன் அறிவிப்பு.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் இன்று (23-01-2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

we-r-hiring

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக நடைபெற இருகின்ற இந்த இடைத்தேர்தலில் த.மா.கா மற்றும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பணியாற்றுகிறது.

எனவே, த.மா.கா சார்பில் தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிக்குழு தலைவர் –

  1. திரு. P. விஜயகுமார் – ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா தலைவர்
  2. திரு. R.ஆறுமுகம் – த.மா.கா – மாநில துணைத் தலைவர்
  3. திரு. விடியல் S. சேகர் – Ex MLA – த.மா.கா-மாநில பொதுச்செயலாளர்
  4. திரு. M. யுவராஜா – த.மா.கா – மாநில இளைஞரணி தலைவர்
  5. திரு. S.D. சந்திரசேகர் – த.மா.கா – மாநில செயற்குழு உறுப்பினர்
  6. திரு.C.S.கௌதமன் – த.மா.கா – மாநில தேர்தல் குழு உறுப்பினர்
  7. திரு. V.P.சண்முகம் – ஈரோடு தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர்
  8. திரு. பிரகாஷ் ஜெயின் – த.மா.கா – மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்
  9. திரு. V.K.மணியன் – த.மா.கா – மாநில பொதுக்குழு உறுப்பினர்
  10. திரு. C.சம்பத்குமார்-ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா விவசாய அணி தலைவர்
  11. திரு. S.K.சின்னுசாமி Ex. MC – த.மா.கா மாநில பொதுக்குழு உறுப்பினர்
  12. திரு. சுந்தரசாமி Ex. MC – த.மா.கா – மாநில பொதுக்குழு உறுப்பினர்
  13. திரு. உழவன் கொற்றவேல் Ex. MC – த.மா.கா – மாநில பொதுக்குழு உறுப்பினர்
  14. திரு. புவனேஸ்வரன் – ஈரோடு வட்டார – த.மா.கா தலைவர்
  15. திரு.K.P.ரபீக் – ஈரோடு மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர்
  16. திரு. OKA. கதிர்வேல் – ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா – துணைத் தலைவர்.

தேர்தல் பணிக்குழுவின் நிர்வாகிகள் பணியை சிறப்பாக மேற்கொள்வார்கள் என்று த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்கள்.

MUST READ