
தமிழகத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார்.

பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை குஷ்பு
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜன.19) மாலை 04.50 மணிக்கு சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று (ஜன.19) மாலை 06.00 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
சூரி – சசிகுமார் கூட்டணியில் கருடன்… வெளியானது முதல் தோற்றம்…
பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்திற்கு செல்லும் பிரதமர், பின்னர் கார் மூலம் சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு அரங்கிற்கு வருகிறார். வழிநெடுக பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.