spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை ஷகிலா மீது தாக்குதல்... வளர்ப்பு மகள் மீது புகார்...

நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…

-

- Advertisement -
பிரபல நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஷகிலா என்ற பெயருக்கே ஒரு பவர் உண்டு. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷகிலா. தமிழில் நடிகையாக அறிமுகமான அவர், மாஞ்சா வேலு, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, அழகிய தமிழ் மகன், ஜெயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இது தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்து உள்ளார்.

we-r-hiring
இதனிடையே கடந்த 2022-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகினார். இத்தொடர் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுக்கொடுத்தது. நிகழ்ச்சியில் ஷகிலாவும், நடிகர் புகழும் இணைந்து செய்த நகைச்சுவை சம்பவங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. நடிகை ஷகிலா ஷீத்தல் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இருவரும் இணைந்து பல யூ டியூப் சேனல்களுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஷகிலாவிற்கும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தாவின் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஷீத்தாவும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து நடிகை ஷகிலாவை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பாக பேசச்சென்ற ஷகிலாவின் வழக்கறிஞைரையும் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

MUST READ