சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நரேன். முதல் படமே வேற லெவலில் மக்களைச் சென்றடைந்தது. முக்கியமாக இப்படத்தில் வெளியான “வாளமீனுக்கும் வெலங்குமீனுக்கு கல்யாணம்…” பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் போட வைத்தது. புதுவிதமான திரைக்கதை யுக்தியால் தரமான விருந்தாக இப்படத்தை இயக்கியிருந்தார் மிஷ்கின். அதைத்தொடர்ந்து நரேனின் அஞ்சாதே படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, முகமூடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் இவர் நடித்திருந்த இன்ஸ்பெக்டர் பிஜு கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்திலும் பிஜு கதாபாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார். நரேன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை
(ஜனவரி 24) வெளியாக உள்ளது. இந்த செய்தியை ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இரவு நேரத்தில், ஊரே அடங்கி இருக்கும் நேரத்தில் நரேன் அந்த நகரத்தை நோக்கி நகர்ந்து செல்வது போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நரேன் இப்படத்தில் பார்வையற்றவராக கூட நடித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. கட்ரிஸ் என்டர்டெயின்மென்ட் யுஏஇ நிறுவனம் தன்னுடைய முதல் படமாக இப்படத்தை தயாரித்துள்ளது. பிரபல இயக்குனர் சுசீந்திரன் இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் இயக்குனர் மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
- Advertisement -