

விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சேலம், கோவை, மதுரை, சென்னை, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டத் தலைவர்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பூத் கமிட்டிகளை வலுப்படுத்த வேண்டும்; எப்போது வேண்டுமானாலும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளை நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், மக்கள் பணிகளைச் செய்யத் தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
நாளை மறுதினம் தொடங்குகிறது டெஸ்ட் போட்டி – இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகவும் மாற்ற நடிகர் விஜய் முடிவுச் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களம் இறங்குமா? என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


