இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் முறையே ஜனவரி 25 ஆம் தேதி முதல்29 தேதி வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், மூன்றாவது டெஸ்ட் போட்டி முறையே பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் 19 தேதி வரையும், நான்காவது டெஸ்ட் போட்டி 23-27 வரையும், ஐந்தாவது டெஸ்ட் போட்டி முறையே 7-11 வரையும் நடைபெற உள்ளது.
இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் வெற்றி பெற மல்லுக்கட்டுவார்கள். இதற்காக இரு அணிகளும் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ராஜீவ் காந்தி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திலையில் முதலாவது மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி விலகியிருப்பது, இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.