Homeசெய்திகள்சினிமாயுவன் சங்கர் ராஜா வாகனத்தை லாக் செய்த அதிகாரிகள்... கஷ்ட நேரத்திலும் காத்திருந்த யுவன்... யுவன் சங்கர் ராஜா வாகனத்தை லாக் செய்த அதிகாரிகள்… கஷ்ட நேரத்திலும் காத்திருந்த யுவன்…
- Advertisement -
கொழும்புவில் இருந்து சென்னை வந்த யுவன் சங்கர் ராஜாவின் வாகனத்தை ஏரோ ஹப் ஊழியர்கள் லாக் செய்தனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமானவர் பவதாரிணி. இவருக்கு வயது 47 ஆகும். பின்னணி பாடகராக வலம் வரும் பவதாரிணி, பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட பாடல்களைபாடிய அவர், தமிழ் தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு ஆளாகினார். தொடர்ந்து இலங்கையில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால், திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இலங்கையில் காலமானதை தொடர்ந்து, அவரை பார்ப்பதற்காக இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இலங்கை சென்றனர். இதனைத் தொடர்ந்து பவதாரிணி உடலானது இன்று விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் அதே விமானத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் வந்த நிலையில், அவர்களை அழைத்துச் செல்வதற்காக விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை எரோ ஹப் ஊழியர்கள் லாக் செய்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் லாக் செய்யப்பட்ட காரில் காத்திருந்தனர். பின்னர் அங்கு வந்த ஊழியர் லாக் எடுத்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.