நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் கோடான கோடி ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் இவர், தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். தளபதி விஜய் தனது மக்கள் இயக்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார். அதன்படி சென்னை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களும் நிதி உதவியும் வழங்கினார். நடிகர் விஜயின் இச்செயல் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது.
அதேசமயம் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது. அதன்படி 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் டெல்லி சென்று உள்ளார்களாம். அடுத்தபடியாக விஜயின் அரசியல் கட்சி வருகின்ற பிப்ரவரி 4இல் பதிவு செய்யப்படும் எனவும் விஜய் தொடங்க உள்ள அரசியல் கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முழு நேர அரசியல்வாதியாக உருவெடுக்க உள்ள விஜய் தனது அரசியல் கட்சியில் படித்த பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களை வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் சினிமா துறையில் இருப்பவர்களுக்கும் மற்ற கட்சியில் இருந்து வருபவர்களுக்கும் தனது கட்சியில் இடம் கொடுப்பதில்லை என்று விஜய் முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் GOAT படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு 2024 ஏப்ரல் மாதத்தில் மதுரையில் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளாராம். எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
- Advertisement -