Homeசெய்திகள்சினிமா2026 தேர்தலை குறிவைத்த விஜய்..... லோகேஷின் 'லியோ 2' நிலைமை என்ன?

2026 தேர்தலை குறிவைத்த விஜய்….. லோகேஷின் ‘லியோ 2’ நிலைமை என்ன?

-

- Advertisement -

2026 தேர்தலை குறிவைத்த விஜய்..... லோகேஷின் 'லியோ 2' நிலைமை என்ன?கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போகிறார் என்ற செய்தி பரவலாகவே பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் அவரது மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து பல மக்கள் பணிகளை செய்து வந்தார். நடமாடும் நூலகம், மாலை நேர கல்விக்கூடம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவி என தொடர்ந்து பல நற்பணிகளை செய்து வந்தார் விஜய். இந்நிலையில் அவரது இயக்க நிர்வாகிகள் டெல்லிக்குச் சென்று தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் கட்சியை பதிவு செய்தனர். இதை நடிகர் விஜய் அதிகாரபூர்வமாகவும் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 2026 தேர்தலை குறிவைத்த விஜய்..... லோகேஷின் 'லியோ 2' நிலைமை என்ன?நடிகர் விஜய் கூறியிருந்த அறிக்கையில் அடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ள படங்களின் வேலைகளை முடித்துவிட்டு முழுமையாக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளப் போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “The Greatest Of All Time” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி 69 படத்தை இயக்குனர் எச்.வினோத் அல்லது கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் விஜய் இந்த படங்களின் வேலைகளை முடித்தாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதன் பின் தான் அவர் தேர்தல் பணிகளையும் கவனிக்க முடியும். 2026 தேர்தலை குறிவைத்த விஜய்..... லோகேஷின் 'லியோ 2' நிலைமை என்ன?இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ 2 படம் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது. லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்டில் இப்படம் உருவாவதாலும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. எனவே தேர்தலுக்கு முன்பே இப்படத்தை விஜய் முடித்துக் கொடுப்பாரா அல்லது கிடப்பில் போடப்பட்டு தேர்தலுக்குப் பின் இது பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

MUST READ