ஜெயம் ரவி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரதர், ஜன கன மன, காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள சைரன் படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் தலைப்பு சில காரணங்களால் சைரன் 108 என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபவமா பரமேஸ்வரன் நடிக்க, போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டு கவனம் பெற்றனர். சமீபத்தில் படத்தின் முதல் பாடல் வெளியானது. அதை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 6) சைரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சைரன் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, சென்னை கோகுலம் ஸ்டுடியோஸ் -ல் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தின் டிரைலரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.