- Advertisement -
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படும் நாயகன் ரஜினிகாந்த். கோலிவுட், டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என மொத்த திரையுலமும் இணைந்து கொண்டாடும் ஸ்டார் ரஜினிகாந்த். மொழிகளை கடந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதியதிரைப்படம் வேட்டையன்.


லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு செயல்படுகிறது. அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன.



