spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சூப்பரான சப்போட்டா மில்க் ஷேக் செய்வது எப்படி?

சூப்பரான சப்போட்டா மில்க் ஷேக் செய்வது எப்படி?

-

- Advertisement -

சப்போட்டா மில்க் ஷேக் செய்ய தேவையான பொருட்கள்:

பழுத்த சப்போட்டா பழம் – 6
பால் – 2 கப்
சர்க்கரை – 5 ஸ்பூன்சூப்பரான சப்போட்டா மில்க் ஷேக் செய்வது எப்படி?

we-r-hiring

செய்முறை:

மில்க் ஷேக் செய்வதற்கு முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் சப்போட்டாவை தோல் உரித்து அதில் உள்ள விதைகளை நீக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சப்போட்டா பழங்கள், சர்க்கரை, பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் கெட்டியாக இருந்தால் மேலும் அரை கப் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.

இப்போது சூப்பரான சப்போட்டா மில்க் ஷேக் தயார்.சூப்பரான சப்போட்டா மில்க் ஷேக் செய்வது எப்படி?

வெயில் காலங்களில் இதனை பருகும் போது ஐஸ் கட்டிகளையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். அல்லது பாலுக்கு பதிலாக வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவை தரும்.

மேலும் சப்போட்டா பழங்களில் நார்ச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சப்போட்டா பழம் உதவுகிறது. மேலும் சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சப்போட்டா மில்க் ஷேக் தயார் செய்து பருகலாம்.

MUST READ