spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து மீண்டும் ஒருமுறை பொய் கூறிய திமுக - அண்ணாமலை...

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து மீண்டும் ஒருமுறை பொய் கூறிய திமுக – அண்ணாமலை விமர்சனம்!

-

- Advertisement -

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில் திமுகவினர் மீண்டும் ஒரு முறை பொய் கூறியிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாகக் குளறுபடிகளால், பொதுமக்கள் திமுக அரசின் மீது கடுங்கோபத்தில் இருப்பதை திசைதிருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களில், மீண்டும் ஒரு முறை பொய் கூறியிருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்வதில் மட்டுமே கவனமாக இருந்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகள் பற்றி பேசும் திமுகவின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

நிதித் துறையில் அனுபவம் பெற்ற, ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி சம்பாதித்ததை எளிதாகக் கண்டறிந்த, தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் போன்றவர்களிடம் பொய் சொல்பவர்கள் ஆலோசனை கேட்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

MUST READ