Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? - திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்? – திருமாவளவன் பேட்டி

-

- Advertisement -

கூட்டணியில் யார் யாரை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தும் அரசமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வி.சி.க கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக மக்கள் கட்சி தலைவர் ஜான் பாண்டியன், இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, திருமுருகன் காந்தி, விடுதலைப்புலிகள் நிறுவனர் குடந்தை அரசன், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து திமுகவுடன் 12ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அதன் பிறகு எல்லாம் தெரியவரும்.தமிழகத்தில் குடியுரிமை திருத்தக் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய சமூகங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சமீபத்தில் நீண்ட நாள் சிறைக்கதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு எனது பாராட்டுக்கள். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் இணைவது தொடர்பான கேள்விக்கு,கூட்டணியில் யார் யாரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கூட்டணியின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார். எங்கள் கூட்டணியில் சமூக நீதி காண சக்திகள், ஜனநாயக சக்திகள் மேலும் வந்து சேர்ந்தால் மகிழ்ச்சி தான். கூட்டணிக்கு பலம் தான் என கூறினார்.

MUST READ