- Advertisement -
தமிழ் சினிமாவில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து தீவண்டி என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் வெளியான இப்படத்தில் டொவினோ தாமஸ் நாயகியாக நடித்திருப்பார். அப்படியே மலையாளம் பக்கம் சென்றவர், உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அடுத்து, யமந்தன் பிரேமாகதா எனும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் அடுத்து புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை என கூறப்படுகிறது. அவர் தனது நண்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ஆண்டுக்குள் இருவரின் திருமணமும் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து சம்யுக்தா தரப்பில் எந்த தகவல்களும் வெளியாகவில்லை.




