
பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை கவுதமி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

லவ்வர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்……வைரலாகும் புகைப்படம்!
தேர்தல் காலங்களில் பா.ஜ.க.வை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டவர் நடிகை கவுதமி. பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக கவுதமி அறிவித்திருந்தார். அதன் பின்னர், சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நடிகை கவுதமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘டியர்’….. விரைவில் வெளியாகும் முதல் பாடல்….. அட்டகாசமான ப்ரோமோ வெளியீடு!
அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பெருமாள் சுவாமி படத்தையும், அண்ணா குறித்த புத்தகத்தையும் நடிகை கவுதமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கவுதமி, “எடப்பாடி பழனிசாமி கட்சியை நடத்தும் விதம் தன்னை கவர்ந்தது. அ.தி.மு.க.வில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘நல்ல காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.