
கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தாசில்தாரைத் தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது தொடரப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று (பிப்.16) தீர்ப்பை வழங்குகிறது.
பர்த் மார்க் படத்தின் முன்னோட்டம் வெளியானது
கடந்த 2011- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பளக்காரன்பட்டி, வல்லடிக்காரர் கோயிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாரருமான காளிமுத்து என்பவர் ஒளிப்பதிவாளருடன் அங்கு சென்று பணப்பட்டுவாடாவை வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தாசில்தார் காளிமுத்துவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கீழவளவுக் காவல் நிலையத்தில் தாசில்தார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் மு.க.அழகிரி மற்றும் மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் உட்பட 21 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் 2011- ஆம் ஆண்டு தொடரப்பட்டு, தொடர்ச்சியாக 2019- ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020- ஆம் ஆண்டு இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
ஜோஸ்வா இமை போல் காக்க படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்
கடந்த மூன்று ஆண்டுகளாக சாட்சிய விசாரணை, அரசுத்தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த வழக்கின் விசாரணைக்காக மு.க.அழகிரி பலமுறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கை பொறுத்த வரை, தாசில்தார், அவரது ஒளிப்பதிவாளர், காவல்துறையினர் என 28 பேர் சாட்சிகளாக இருந்தனர்; இதில் பெரும்பாலான சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறியுள்ளன.
கடந்த 13- ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (பிப்.16) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.