- Advertisement -
சென்னை வந்த சமந்தாவிற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு அளித்துள்ளதை, அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கோலிவுட், டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் ஒருவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது சமந்தாவுக்கு தான். தமிழில் விண்ணைத்தாண்டிய வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று ஒட்டுமொத்த திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமந்தா நடிப்பில் இறுதியாக வெளியான யசோதா, மற்றும் சாகுந்தலம் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆனால், குஷி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
