வைபவ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ரணம். இந்தப் படத்தை ஷெரீஃப் இயக்கியுள்ளார். மிதுன் மித்ரா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிலும் அரோல் கொரெல்லியின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் டீசர் வெளியான நிலையில் அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பாடல்களையும் பட குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த படம் க்ரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த படத்தில் வைபவ் உடன் இணைந்து, தான்யா ஹோப், சரஸ் மேனன், நந்திதா ஸ்வேதா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் வைபவ் ரணம் படம் குறித்து பேசி உள்ளார். “நான் நடிக்கும் 25வது படம் இது. அதற்குள் இத்தனை படங்கள் நடித்துவிட்டேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சரஸ் மேனன் நடித்துள்ள கதாபாத்திரத்தில் பலரும் நடிக்க மறுத்தனர்.
இயக்குனர் ஷெரீஃப் அவரை எப்படி நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்துள்ளார். ஷெரீஃப் இந்த படத்திற்காக நிச்சயம் பாராட்டை பெறுவார். இந்த படத்தில் பெண்களின் கதாபாத்திரம் வலிமையானதாக இருக்கும். படத்தில் துப்பறியும் புலனாய்வு காவல்துறையினருக்கு உதவும் ஓவியக் கலைஞனாக நான் நடித்துள்ளேன். உலகத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதா என்று இந்த படத்தை பற்றி அனைவரும் ஆச்சரியமாக பேசுவார்கள்” என்று தொடர்ந்து பேசி உள்ளார்.
- Advertisement -