spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!

சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!

-

- Advertisement -

 

சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது!

we-r-hiring

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியா உயிர் தப்பினார்.

ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார், முன்னாள் சென்ற கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மேயரின் கார் பின்னால் வந்த லாரி, மேயர் கார் மீது மோதியது. அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால் சாலையில் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விபத்தில் காரில் பயணித்த மேயர் பிரியா, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேயரின் காரின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் பலத்த சேதமடைந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன், போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய தகவல்….

விபத்துக் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ