கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே வெற்றிமாறன் இயக்கத்திலும் சூர்யாவின் நடிப்பிலும் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்காக காளையை அடக்கும் பயிற்சியை மேற்கொண்டார் சூர்யா.
படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் வெற்றிமாறன், விடுதலை இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் வாடிவாசல் திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் விடுதலை இரண்டாம் பாகத்திற்கு பிறகு வாடிவாசல் படம் தொடங்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா வெளியேறுவதாகவும் சூர்யாவிற்கு பதிலாக தனுஷ் வாடிவாசலில் நடிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பல செய்திகள் தீயாய் பரவி வந்தன.
இருப்பினும் வாடிவாசல் திரைப்படத்திற்காக ஒப்பந்தம் போடப்பட்டு , படத்திற்கான உரிமையும் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதனால் சூர்யா படத்திலிருந்து விலக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் வெற்றிமாறன், சூர்யா இருவரும் திடீரென சந்தித்து பேசி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இருவரின் பேச்சு வார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. ஒருவேளை வாடி வாசலில் இருந்து சூர்யா விலகுவது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெற்றதா? இல்லை படம் தொடங்குவது குறித்து பேசப்பட்டதா? என்று சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
- Advertisement -


