spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை... தீராப்பிரச்சனை என யுவன் சங்கர் ராஜா வேதனை...

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை… தீராப்பிரச்சனை என யுவன் சங்கர் ராஜா வேதனை…

-

- Advertisement -
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தீராப்பிரச்சனையாக உள்ளதாக இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும், சிறுமியின் கொலை தொடர்பாகவும் தெரிவித்துள்ளார்

we-r-hiring
இந்நிலையில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தீராப் பிரச்சனையாக இருக்கிறது என இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 28.9 சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லித் தர வேண்டும். அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பது கட்டாய அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாதுகாக்க, குழந்தைகள் வளரும்போதே, அவர்களுக்கு நற்குணங்களை சொல்லி வளர்ப்பது அவசியம். புதுச்சேரியில் நடந்த இந்த கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதன் மூலம், பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம். இது தற்போது தெளிவாக தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட சமுதாயமாகவும், ஒன்றுபட்ட சமுதாயமாகவும் வளர்வோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

MUST READ