spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்துக்காக விஜய் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்?

‘தளபதி 69’ படத்துக்காக விஜய் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்?

-

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். எனவே தளபதி 69 படம் தான் தனது கடைசி படம் என்றும் தெரிவித்திருக்கிறார். 'தளபதி 69' படத்துக்காக விஜய் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்?ஆதலால் தளபதி 69 திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், த்ரிவிக்ரம் உள்ளிட்ட இயக்குனர்கள் இயக்கவாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட படங்களின் இயக்குனர் எச். வினோத், நடிகர் விஜய்யை சந்தித்து தளபதி 69 படத்துக்கான ஒன் லைன் ஸ்டோரியை கூறி இருக்கிறாராம். 'தளபதி 69' படத்துக்காக விஜய் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்?இதற்கு விஜய் ஓகே சொல்லி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தளபதி 69 படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதால் அவர்கள் த்ரிவிக்ரமை தான் விஜயின் அடுத்த படம் இயக்குனராக தேர்ந்தெடுப்பார்கள் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. இருந்த போதிலும் இன்னும் பத்து நாட்களுக்குள் தளபதி 69 பட இயக்குனர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ