சீமான், கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? – அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் நந்தவனம் சீரமைத்தல் முதலான பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய சேகர் பாபு,
இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்கு உள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோவிலுக்கு செலவு செய்யப்படும் என நம்பிக்கை வந்துள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு திருக்கோவில்களுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை வந்துள்ளது.
கலைஞரின் நினைவாக மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் உடைப்பேன் என சீமான் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் ஆவேசப்பட்டதற்கு எங்கள் கைகள் அதுவரை பூபரிக்குமா என அமைச்சர் சேகர் பாபு பதில்.
