spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமலையாளம், தெலுங்கை அடுத்து தமிழுக்கு வரும் பிரேமலு

மலையாளம், தெலுங்கை அடுத்து தமிழுக்கு வரும் பிரேமலு

-

- Advertisement -
மலையாளத்தில் வௌியாகி வெற்றி பெற்ற பிரேமலு திரைப்படம் தற்போது தமிழிலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் மோகன்லால் நடித்த பிரம்மயுகம், மமிதா நடித்த பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்களும் அடங்கும்.

we-r-hiring
கடந்த மாதம் 9-ம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் வௌியான திரைப்படம் பிரேமலு. இதில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 3 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவானது. ஆனால், இத்திரைப்படம் தற்போது 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள மொழியில் மட்டும் வெளியான இத்திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்படம், கடந்த 8-ம் தேதி தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தெலுங்கு மொழியில் வௌியான பிரேமலு திரைப்படம் அங்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், தற்போது இத்திரைப்படம் தமிழுக்கும் வருகிறது. பிரேமலு படத்தை தமிழில் டப் செய்து, வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வௌியிடுகின்றனர். இதனால், தமிழ் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ