சென்னை அம்பத்தூரில் 200 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்த ஏடிஎம் இயந்திரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த கிளையின் ATM ஆனது அதே கட்டடத்தில் உள்ளது. அதில் இன்று காலை முதல் பணம் எடுக்க வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலாக 12,000 ரூபாய் வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அம்பத்தூரை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் 3 முறை பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார்.அதில் 8 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்தபோது. 12 ஆயிரம் ரூபாய் கூடுதலாக மொத்தம் 20,000 ரூபாய் வந்துள்ளது.
அதேபோல் திருமுல்லைவாயிலை சேர்ந்த சந்திரசேகர் என்பவரும் 20000 ரூபாய் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் பணம் எடுக்க முடியாமல் 8 ஆயிரம் எடுக்க வேண்டும் என கட்டளை வந்துள்ளது. அதன்படி எட்டாயிரம் ரூபாய் எடுக்க முயற்சி செய்தபோதும் அவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாகவும் கூறப்படுகிறது.இதேபோன்று 10 க்கும் மேற்பட்ட இதரவங்கிகளின்சேவையை பயன்படுத்தும்வாடிக்கையாளர்களுக்-கும் கூடுதல் பணம் இந்தியன் வங்கியின் ATM -ல் இருந்து வந்ததாகவும் அதில் 6 பேர் பணத்தை வங்கிக்கு நேரில் வந்து பணத்தை திருப்பி கொடுத்ததாகவும். இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் நடந்த தவறு பற்றி வங்கி அதிகாரிகள் கூறுகையில். ATM இயந்திரத்தில் 200 ரூபாய் வைக்க வேண்டிய ட்ரேவில்ரூ 500 ரூபாய் நோட்டுகளை ATM ல் பணம் வைக்கும் நபர்கள் தவறுதலாக வைத்ததால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்ததாகவும். வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ATM ல் உள்ள பிரச்சனை உடனடியாக சரி செய்ய தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்யும் ஏடிஎம் இயந்திரங்களை பராமரிப்பு குழுவினர் உடனடியாக நேரில் வந்து சரிசெய்ததாகவும் கூறப்படுகிறது.
அம்பத்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பரபரப்பான பகுதியிலே இயங்க கூடிய இந்தியன் வங்கியின் ATM இயந்திரத்தில் குறைந்த தொகை எடுக்க முயற்சி செய்து.அதிக பணம் வந்தது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் கூடுதலாக பணம் வந்ததாக வாடிக்கையாளர்கள் ஒரு சிலர் தாங்களாகவே முன்வந்து வங்கியில் ஒப்படைத்துச் சென்றனர்.


