பிரபல இயக்குனர் பா ரஞ்சித், கடந்த 2012 ஆம் ஆண்டு அட்டக்கத்தி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் திரைப்படத்தை இயற்றினார் பா ரஞ்சித். பின்னர் ரஜினியை வைத்து கபாலி எனும் கேங்ஸ்டர் படத்தை இயக்கி புகழ்பெற்றார். மேலும் மீண்டும் ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். அதன் பின்னர் ஆர்யா நடிப்பில் இவர் இயக்கியிருந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஆர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் பா ரஞ்சித். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையின் அடுத்ததாக பா ரஞ்சித், சார்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பா ரஞ்சித், ரசிகர்களுக்கு டிவிஸ்ட் கொடுக்கப் போகிறார்.
அதாவது இதற்கிடையில் சிறிய பட்ஜெட்டில் படம் பண்ண போவதாக திட்டமிட்டுள்ளாராம். அதன்படி அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் கேங்ஸ்டர் ஆக்சன் சம்பந்தமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்த படம் தொடர்பான வேலைகள் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்கப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -