யோகி பாபு, செந்தில் ஆகியவரின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் சகுனி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து பிரணிதா, சந்தானம், ராதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். அரசியல் சார்ந்த கமர்சியல் படமாக வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இதைத்தொடர்ந்து சங்கர் தயாள் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் யோகி பாபு மற்றும் செந்தில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு குழந்தைகள் முன்னேற்றக் கழகம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் சங்கர் தயாள் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் செந்தில் கடைசியாக லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் யோகி பாபு நடிப்பில் கடைசியாக தூக்குதுரை திரைப்படம் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


