சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி.
விசாரணை கைதி உயிரிழப்பு- குடும்பத்தினர் போராட்டம்!
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதினர். முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 35, சிவம் துபே 45, ரவீந்திர ஜடேஜா 31, ருத்துராஜ் கெய்க்வாட் 26 ரன்களை எடுத்தனர்.
பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹெட் 31, எய்டன் மார்க்ரம் 50, அபிஷேக் சர்மா 37 ரன்களை எடுத்தனர்.