Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!

பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!

-

 

பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது வழக்கு!

கோபிச்செட்டிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட முயன்ற தேர்தல் பறக்கும் படையினரை பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பிரமுகர்களின் வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பூரில் இருந்து கோபிச்செட்டிப்பாளையம் வந்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தின் வாகனத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். அப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக நடுவழியில் காரை நிறுத்திய முருகானந்தம் தேர்தல் அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு மிரட்டினார்.

வாகன சோதனைக்கு ஒத்துழைக்குமாறு காவலர்கள் கேட்ட நிலையில், மரியாதையாகப் பேச பழங்குங்கள் என்று மிரட்டல் தொனியில் பேசினார். இந்த விவகாரம் குறித்து குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபலமான குளிர்பான பாட்டிலுக்குள் ரப்பர் பொருள்!

இதையடுத்து, வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் குன்னத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

MUST READ