spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசூடுபிடித்து மக்களவைத் தேர்தல் களம்....கட்சிக்கொடி, சின்னங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்!

சூடுபிடித்து மக்களவைத் தேர்தல் களம்….கட்சிக்கொடி, சின்னங்கள் தயாரிக்கும் பணி மும்முரம்!

-

- Advertisement -

 

we-r-hiring

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பரப்புரைச் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கொடிகள், சின்னங்கள் தயாரிக்கும் பணி சிவகாசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கொளுத்தும் வெயிலில் குடிக்க தண்ணீர் கேட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!

நாட்டின் ஜனநாயகத் திருவிழாவிற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாள் முதலாகவே கோடை வெயிலின் உக்கிரத்தைக் கடந்து அரசியல் கட்சிகளின் பரப்புரை தகிர்த்து வருகிறது. தேர்தல் பரப்புரையில் முக்கிய பங்கு வகிக்கும் அரசியல் கட்சிகளின் கொடி, சின்னங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் புகைப்படங்கள் அச்சிடும் பணியும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுக்கு பெயர் போன சிவகாசியில் இதற்கான பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றது. புதிய வரவான ஸ்டார் வகை கொடி, அரசியல் கட்சிகளிடையே வரவேற்பை பெற்றிருப்பதாகக் கூறுகிறார் தனியார் அச்சக உரிமையாளர் காசிராஜன்.

திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

இதைத் தவிர அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முகங்கள் அச்சிடப்பட்ட முகமூடிகள், தோரணங்கள், சின்னங்களுடன் கூடிய பனியன்கள், வேட்டிகள், துண்டுகள் உள்ளிட்டவையும் தயாரிக்கப்பட்டு வருவதால், அச்சக உரிமையாளர்களும், தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

MUST READ