spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராதாபுரத்தில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

ராதாபுரத்தில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று (07.04.2024) – திருநெல்வேலி, ராதாபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.சி.ராபர்ட் புரூஸ் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்கள். இந்நிகழ்ச்சியினை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.பி.கே.ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். உடன் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டார்கள்.

MUST READ