spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇணையத்தில் ட்ரெண்டாகும் 'புஷ்பா 2' டீசர்!

இணையத்தில் ட்ரெண்டாகும் ‘புஷ்பா 2’ டீசர்!

-

- Advertisement -

கடந்த 2003 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஆர்யா திரைப்படம் வெளியானது. இணையத்தில் ட்ரெண்டாகும் 'புஷ்பா 2' டீசர்!இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 2021 இல் மீண்டும் அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு புஷ்பா இரண்டாம் பாகத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய அளவில் இருக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆகவே புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆரம்பத்திலிருந்து அதிகமாக இருந்து வந்தது.

we-r-hiring

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் புஷ்பா 2 படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜுனின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 – தி ரூல் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் அல்லு அர்ஜுன் வெறித்தனமான லுக்கில் இருக்கிறார். இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

MUST READ