spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லக்னோ அணியை வீழ்த்தியது டெல்லி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லக்னோ அணியை வீழ்த்தியது டெல்லி!

-

- Advertisement -

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: லக்னோ அணியை வீழ்த்தியது டெல்லி!

we-r-hiring

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி.

ஆரணியில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!

லக்னோவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ஃப்ரேசர் 55, கேப்டன் ரிஷப் பந்த் 41, ப்ரித்வி ஷா 32 ரன்கள் எடுத்தனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் ஆயுஸ் பதோனி 55, கேப்டன் கே.எல்.ராகுல் 39, அர்ஷ்த் கான் 20 ரன்களைச் சேர்த்தனர்.

டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!

மொஹாலியில் இன்று (ஏப்ரல் 13) இரவு 07.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

MUST READ