Homeசெய்திகள்தமிழ்நாடுமீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு...காரணம் என்ன தெரியுமா?

மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு...காரணம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) நள்ளிரவு முதல் இரண்டு மாதங்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வரவுள்ளதால் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

“ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன் வசமாகும்”- அண்ணாமலை பேச்சு!

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 15- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடித் தடைக் காலம் நாளை (ஏப்ரல் 14) நள்ளிரவு முதல் தொடங்குகிறது. மீன் குஞ்சுப் பொறித்து வளர்வதற்கான சூழலைத் தற்போது நிலவுவதால் வரும் ஜூன் 15- ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு ஆழ்க்கடலில் சென்று மீன்பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தற்போது மீன்கள் வரத்துக் குறைவாக உள்ளதால் பாறை உள்ளிட்ட மீன்கள் ஒரு கிலோ ரூபாய் 250 முதல் ரூபாய் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. தடைக்காலம் தொடங்கும் நிலையில், மீன்களின் வரத்துக் குறையும் என்பதால் மீன்களின் விலை இரண்டு மடங்காக உயர வாய்ப்புள்ளது.

MUST READ