பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களை பாதுகாப்பான விதிகளை பின்பற்றச் செய்வதற்கான நிலையான இயக்க நெறிமுறைகள் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஏற்கெனவே சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டு பயணம் தொடர்வதாக போக்குவரத்துத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன

மாணவர்கள் படியில் தொஙக நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ பேருந்தை நிறுத்தி, படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும், ஓட்டுநர்கள், நடத்துநர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்காமல் நிலைமை கட்டுப்பாட்டை மீறினால், காவல் நிலையத்துக்கோ, அவசர அழைப்பு எண்ணான 100 அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கோ தகவல் தெரிவித்து புகார் அளிக்கலாம் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வாயிலாக அறிவித்துள்ளார்.
