Homeசெய்திகள்சினிமா'லியோ' தீம் பாடல் உருவான விதம் வெளியீடு

‘லியோ’ தீம் பாடல் உருவான விதம் வெளியீடு

-

- Advertisement -

நடிகர் விஜயின்லியோதீம் பாடல் உருவான விதத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.

லியோ தீம்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் 67 வது படத்தின் தலைப்பு கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ‘லியோ‘ என பெயரிடப்பட்ட ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. அக்டோபர் 19ம் தேதி லியோ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

we-r-hiring

leo

அனிருத்தின் பின்னணி இசையுடன் நடிகர் விஜய் தோன்றும் காட்சிகள் வெளியானது. அதில் இடம் பெற்ற லியோ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்த லியோ தலைப்பு வீடியோவில் இடம் பெற்ற லியோ பாடல் உருவான விதத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

லியோ படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் போன்ற முன்னனி நடிகர்கள் பலர் நடிக்கின்றனர். லியோ ப்ரோமோ வீடியோ 6 நாட்களில் 4 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடதக்கது.

MUST READ