spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்

பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்

-

- Advertisement -
ஸ்டார் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, படத்தின் இயக்குநர் எலனுக்கு, தயாரிப்பாளர் பரிசு அளித்துள்ளார்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் கவின். சின்னத்திரையில் ரியாலிடி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து வந்த அவர், வெள்ளித்திரைக்கு சென்று லிஃப்ட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து கவின் நடித்த திரைப்படம் தான் டாடா. இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போனது. இறுதியாக வெளியான பிறகு, படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

we-r-hiring
இதையடுத்து, நடன இயக்குநர் சதீஷ், இயக்குராக அறிமுகமாகும் படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். அதேபோல, பியார் பிரேமா காதல் பட இயக்குநர் இலடனுடன் கவின் புதிய படம் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் கவினுடன் இணைந்து, ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாடல்கள், மேக்கிங் வீடியோ, வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனிடையே படத்தின் இறுதி பதிப்பை காணத் தயாரிப்பாளர் சகரை இளன் அழைத்த நிலையில், படத்தை பார்க்கும் முன்பே, ஐதராபாத்தில் வாங்கிய நிலத்தை அவருக்கு தயாரிப்பாளர் பரிசளித்தார்.

MUST READ