Homeசெய்திகள்தமிழ்நாடுகரேப்சன், கலெக்சன், கமிஷன் வாங்குவதில் தான் முதல்வர் முதலிடம்- ஈபிஎஸ்

கரேப்சன், கலெக்சன், கமிஷன் வாங்குவதில் தான் முதல்வர் முதலிடம்- ஈபிஎஸ்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று நாடே எதிர்பார்த்து கொண்டுள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

eps

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், அன்பழகன் ராஜேந்திர பாலாஜி சிவி சண்முகம் வளர்மதி, கேபி முனுசாமி, பொன்னையன் முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் அதிமுகவின் கூட்டணி கட்சியிரான ஜி கே வாசன் ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி தேவநாதயாதவ், பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்றே நாடே எதிர்பார்த்து கொண்டுள்ளது, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நோக்கி உள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும், ஜெயலலிதாவின் தெய்வீக வாக்கை போல் 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் வெற்றிப்பெற்றோம். அதேபோல் வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவது 2024ல் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெரும். ஒருவாக்கு கூட சிதறவிடாமல் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்.

edappadi palanisamy

22 மாத திமுக ஆட்சியில் ஒரு துரும்பை கூட கிள்ளிபோடவில்லை, ரவுடிகள் அட்டகாசம், குண்டர்கள், கட்டபஞ்சாயத்து, போதை பொருட்கள் தலைவிரித்துள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஏராளமான திட்டங்களை வாரி வாரி வழங்கியவர் அதிமுகவினர் தான், தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டுமானால் பொருளாதரத்தில் நாம் முன்னேற வேண்டும், ஈரோடு மாவட்டத்தின் ஜவுளி உள்ளிட்ட தொழில் பல வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளோம், ஏரிகள் தூர் வாரப்பட்டது. தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஜவுளி தொழில் செய்யவும் வளர்ச்சிக்காகவும் அதிமுக பல ஆண்டுகளாக பாடுப்பட்டது, விசைத்தெறி உரிமையாளர்களுக்கு வளர்ச்சி கொடுப்பதற்கு வருடாவருடம் இலவச வேட்டி , சேலையை வழங்கி வந்தோம், ஆனால் திமுக ஆட்சியில் அதை நிறுத்தியதால், பல ஆயிரம் நெசவாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.

விலையில்லா வேட்டி சேலையை அவர்களுக்கு கொடுத்து இருந்தால் , இந்த தொழில் முடங்கி இருக்காது, விசைத்தறி குடும்பத்தின் பெண்கள் கண் கலங்கி உள்ளனர், திறைமையற்ற் முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் நாட்டை ஆட்சி செய்து வருகிறார். கரேப்சன், கலெக்சன், கமிஷன் வாங்குவதில் தான் முதலமைச்சர் முதலிடம். அமைச்சர் அதிகளவில் யார் கமிசன் தருவார்கள் என்று பார்த்து வருகிறார். அதிமுக கூட்டத்தில் பங்குபெறமால் இருக்க மக்களை மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திமுக மாவட்ட செயலாளர் போன்று செயல்பட்டு வருகின்றார். காட்சியும், ஆட்சியும் மாறும்,. அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் எதிர்வினை சந்திப்பீர்கள். சீப்பை ஒளித்தால் திருமணம் தடை பெறாது போன்று, அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது, காற்றை எப்படி தடுக்க முடியாதோ, அதேபோல் அதிமுக வெற்றியை தடுக்க முடியாது.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு தேர்தல் பயம்வந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் நிற்கும்போது, அவர் வெற்றி பெற 20 அமைச்சர்களை இறக்கி உள்ளனர், தினமும் கிடா விருந்து நடைபெறுகிறது. வீடுவிடாக சென்று ஆயிரம் பணம் கொடுக்கிறார்கள், எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய பணம். அதுவும் கொள்ளையடித்த பணம், எல்லா துறையும் சீரழிந்து கிடக்கிறது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கும் அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைத்து வருகிறது.

Home

22 மாத திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் திமுக செயல் படுத்தவில்லை, பேனாவை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, மறைந்தவர்களை பற்றி பேசகூடாது ஆனால் எல்லா பக்கமும் எதிர்ப்பு வருகிறது. அதை சிந்தித்து பார்க்க வேண்டும், கடலில் வைத்தால் தான் பேனாவா, நினைவு மண்டபம் முன் வைக்க வேண்டியது தானே? 2 கோடியில் வைக்க வேண்டியது தானே? 80 கோடியில் தான் வைக்கனுமா?? 78 கோடியை மக்களுக்கு செலவு செய்ய வேண்டியது தானே” என பேசினார்.

MUST READ