spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

we-r-hiring

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக, கொடைக்கானல் சென்றடைந்தார்.

வருங்கால கணவர் குறித்த விமர்சனங்கள்….. பதிலடி கொடுத்த வரலட்சுமி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஓய்வெடுப்பதற்காக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர், அங்கிருந்து கார் மூலமாக திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வழியாக வந்து தேனி மாவட்ட எல்லையில் உள்ள காற்றோடு வழியாக சென்றார். இதனால் திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் சற்று நேரத்திற்கு தடை விதித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

100 நாட்களைக் கடந்த ரஜினியின் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனங்கள் கொடைக்கானல் சென்ற பிறகு, அந்த சுற்றுலா வாகனங்களும் அவ்வழியே அனுமதிக்கப்பட்டன. கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கியுள்ளார். வரும் மே 04- ஆம் தேதி மீண்டும் சென்னைக்கு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

MUST READ