Homeசெய்திகள்சினிமா'கூலி' படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா...... ரஜினியின் பதில் என்ன?

‘கூலி’ படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா…… ரஜினியின் பதில் என்ன?

-

- Advertisement -

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கூலி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா...... ரஜினியின் பதில் என்ன?இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இந்த படத்தை இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கூலி படத்துக்கு எதிராக சிக்கல் ஒன்று எழுந்தது. அதன்படி தங்க மகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த ‘வா வா பக்கம் வா’ பாடலின் Disco Disco என்ற பகுதியை அனிருத் நவீனப்படுத்தி இசையமைத்திருந்த நிலையில் அது கூலி படத்தின் டீசரில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா குற்றம் சாட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கூலி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா...... ரஜினியின் பதில் என்ன?அதேசமயம் நடிகர் ரஜினி, வேட்டையன் படப்பிடிப்புக்காக சமீபத்தில் மும்பை சென்றிருந்தார். வேட்டையன் படப்பிடிப்பை முடித்த ரஜினி தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில் செய்தியாளர்கள் ரஜினியிடம் கூலி படத்தின் டீசர் குறித்து கேள்வி எழுப்பினர். டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று ரஜினி பதிலளித்துள்ளார். மேலும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினி, தயாரிப்பாளருக்கும் இளையராஜாவிற்கும் இடையிலானது என்று பதிலளித்துள்ளார்.

MUST READ