Homeசெய்திகள்சினிமாமாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் காம்போவின் புதிய படம்...... கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் காம்போவின் புதிய படம்…… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தையும் இயக்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அடுத்ததாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் காம்போவின் புதிய படம்...... கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! மாரி செல்வராஜ், தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல மூன்றாவது திரைப்படமும் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. அதன்படி மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாகவும் துருவ் விக்ரமின் மூன்றாவது படமாகவும் உருவாகி வரும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அதேசமயம் இந்த படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மாரி செல்வராஜ்- துருவ் விக்ரம் காம்போவின் புதிய படம்...... கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க போவதாகவும் எழில் அரசு ஒளிப்பதிவு செய்யப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பைசன்- காளமாடன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ