Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்......நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்……நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

-

- Advertisement -

1. சுட சுட உருளைக்கிழங்கு கார பணியாரம் செய்வது எப்படி?சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்......நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம், கறிவேப்பிலை, சிறிதளவு இஞ்சி சேர்த்து தாளித்து அத்துடன் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். ஐந்து நிமிடம் இதமான தீயில் சூடு பிடித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பணியார கல்லை எடுத்து அதில் எண்ணெய் தடவி இட்லி மாவை பாதி குழி அளவில் ஊற்ற வேண்டும். அதன் பிறகு ஒரு ஸ்பூன் அளவு உருளைக்கிழங்கு கலவையை மாவின் மேல் வைத்து அதற்கும் மேல் அரைக்கரண்டி இட்லி மாவை ஊற்ற வேண்டும். இதுபோன்ற அனைத்து குழிகளிலும் ஊற்றி பணியாரம் இருபுறமும் வெந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்......நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

இப்போது சுட சுட உருளைக்கிழங்கு கார பணியாரம் தயார். இதற்கு தேங்காய் சட்னி பொருத்தமான சைடிஷாக இருக்கும்.

2. சுட சுட உருளைக்கிழங்கு மெதுவடை செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு மெதுவடை செய்ய தேவையான பொருட்கள்:

உளுந்து – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 1
அரிசி மாவு – 2 ஸ்பூன்
வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறியது ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

உருளைக்கிழங்கு மெது வடை செய்ய முதலில் உளுந்தினை நன்கு கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் உருளைக்கிழங்கினை குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்.

இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கையும் அரைத்து வைத்திருக்கும் உளுந்தையும் ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அதில் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, அரிசி மாவு, இஞ்சி உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை சூடாக்க வேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள மாவை கையில் போட்டு தட்டி சிறிய ஓட்டை போட்டு அதனை அப்படியே எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.சுட சுட ஈவினிங் ஸ்நாக்ஸ்......நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

இப்போது சுட சுட உருளைக்கிழங்கு மெது வடை தயார். இதனை மாலை நேரங்களில் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடலாம். மேலும் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி போன்றவை உருளைக்கிழங்கு மெதுவடைக்கு பொருத்தமான சைட்டிஷாக இருக்கும்.

 

MUST READ