தமிழ் சினிமாவின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி(57) இன்று (பிப்ரவரி 19) அதிகாலை 03.30 மணிக்கு உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் ஆம்புலன்ஸில் ஏற்றி அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நடிகர் மயில்சாமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.


தமிழ் சினிமாவில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் மயில்சாமி தனித்துவம் கொண்டவர். மயில்சாமி தனது ’மிமிக்ரி’ வாயிலாக தமிழ் ரசிகர்களை மகிழ வைத்தவர். சிறு சிறு பாத்திரங்களிலில் நடித்துக் கோண்டே பின்னணி குரல் கலைஞராகவும் வளர்ந்து வந்தார்.
மேலும், இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றிலும் பங்களித்துள்ளார்.

சினிமா, நடிப்பை கடந்து சமூக சேவையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தொலைகாட்சி நிகழ்ச்சிகள், நூல் வெளியிட்டு விழா, ஆன்மீகப் பணி என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தார்.
மனதில் தோன்றியதை பேசக்கூடிய, செயல்படக் கூடிய ஒரு நல்ல மனிதரை திரையுலகம் இழந்து விட்டது.
நடிகர் மயில்சாமியின் மறைவு திரைதுறையினர் மத்தியிலும் அவருடை ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இயக்குநர் பாரதிராஜா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவையான நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்தவன், என் பாசத்திற்குரியவன், திரு. மயில்சாமி மறைவு தமிழ் திரையுலகிற்கு பெரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.


