- Advertisement -
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் ஜல்லிகட்டு போட்டி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர்.


சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார், ஆத்தூர் கோட்டாட்சியர் திருமதி.சரண்யா ஆகியோர் உறுதிமொழியேற்று ஜல்லிக்கட்டு துவக்கி வைத்தனர்.
போட்டி துவங்கிய நேரத்திலிருந்து மதியத்திற்குள் மாடு முட்டியதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். பார்வையாளர், காளை உரிமையாளர் ஒருவர் உள்பட 3 பேர் மாடு முட்டி காயமடைந்துள்ளனர்.
ஆத்தூர் காவல் துணை ஆணையர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆத்தூர் தம்மம்பட்டி மருத்துவ குழுவினர் சம்பவ இடத்தில் முகாம்மிட்டுள்ளனர், கால்நடை மருத்துவர் முருகன் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
